தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 25ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது. வருகிற மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் குறித்து அறிக்கையை, கூட்டத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்.