தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் மூழ்கி 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளக்கரையில், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் இறங்கிய சிறுமி மட்டும் மாயமானர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர், குளத்தில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டனர். குழந்தையை கண்ட சிறுமியின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.