கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு, தேரட்டம்மலில் நடந்த செவன்ஸ் கால்பந்து போட்டியின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்து மைதானத்திற்குள் வெடித்து பார்வையாளர்கள் மேல் விழுந்தது. அலறியடித்து ஓடிய பார்வையாளர்கள் மீது பட்டாசு வெடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.