போச்சம்பள்ளி அருகே தென்னீஸ்வரன் கோவிலில் பிரதோஷம் வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் இன்று (அக்.,15) மாலை மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி தேவருக்கும் பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.