உலகில் பல கோடி மக்கள் உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். எனவே குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். உணவை வீணடிக்க கூடாது என்ற கருத்தை அனைவரிடமும் வலியுறுத்த வேண்டும். வீட்டில் தேவைக்கு ஏற்ப சமைப்பது, திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட விருந்துக்களில் அதிக அளவு உணவுகள் வீணாக்கப்படுவது தவிர்க்க வேண்டும். உரியவர்களுக்கு உணவு சென்று சேர வேண்டும் என்ற உறுதியை இந்த நாளில் ஏற்க வேண்டும்.