கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் அருகே தட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் சேகர் ரெட்டி (25). இவர் நேற்று தனது புல்லட்டை தட்டகானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகில் சாவியுடன் நிறுத்தி விட்டு மேய்ச்சலுக்கு மாட்டை கட்ட சென்றார். அப்போது நண்பர்களுடன் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சாவியுடன் புல்லட் நிற்பதை பார்த்து கீழே இறங்கி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருடி கொண்டு தப்பினார்.
அப்போது கெலவரப்பள்ளி அணை அருகே சென்ற போது, மலகலக்கி கிராமம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது புல்லட் மோதியது. இதில் பலத்த காயமடைத்த வாலிபா பலியானார். தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்ததது திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை அருகே வாடிப்பட்டியை சேர்ந்த அபினேஷ் (33) என்பதும் இவர் ஒசூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்ததது.