ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பக்கமுள்ள சந்தாபுராவை சேர்ந்த 3 பேர், இன்று(அக்.5) காலை, ஒரு சொகுசு காரில் சென்னை நோக்கி சென்றனர். வழியில், பெங்களூர் - ஓசூர் சாலையில் எடவனஅள்ளி பகுதியில் அந்த கார், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கீழே குதித்து தப்பியோடினர். காரின் முன்புறம் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. நடுரோட்டில், கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.