கர்நாடகா தமிழக எல்லையான அத்திப்பள்ளி அருகே உள்ள சந்தாபுரா நேற்று சென்னை நோக்கி சென்ற ஒரு கார் ஓசூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் வந்த போது திடீரென தீப்பிடித்து கார் எரியத் தொடங்கியது. இதைக் கண்டு காரில் இருந்த 3 பேர் அதிர்ச்சியடைந்து அவர்கள் கீழே இறங்கி ஓடி விட்டனர்.
சிறிது நேரத்தில் முழுவதும் தீ பரவியது காரின் முன்புறம் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. நடுரோட்டில், கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.