இந்தியா உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை நோக்கி நகர்ந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் விவாசயம் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எளிய தீர்வு தற்சார்பு பொருளாதாரம் தான். வாய்ப்பு இருப்பவர்கள் மாடித்தோட்டம், வீட்டின் பின்புறம் ஆகிய இடங்களில், தேவையான காய்கறிகளை நாமே விளைவித்து பயன்படுத்துவது பாதுகாப்பான, ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு வழிவகுக்கும்.