
நச்சலூர் கடைவீதியில் லாட்டரி சீட்டு பெற்ற 2 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜி 40, கருப்பையா 42 ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 240 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.