கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் நடேசன் ஆரம்ப பாடசாலையில் மறைந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை முத்துக்கண்ணு நினைவு சத்துணவுக்கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், அதிமுக கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சத்துணவுக்கூடம் திறந்து வைத்தனர். பிறகு மாணவர்களின் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ராணி, "நன்றி சொல்லவே உனக்கு" என்ற பாடல் மூலம் மறைந்த ஆசிரியை முத்துக் கண்ணு நினைவாக அவரின் சாதனையை போற்றி பாடி அனைவரின் கணவனத்தை ஈர்த்தார்.
இந்நிகழ்வில் முத்துகண்ணு ஆசிரியரின் குடும்பத்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியர் காளியம்மாள், பள்ளி முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.