குளித்தலையில் ஆசிரியரின் குடும்பத்தாருக்கு உற்சாக வரவேற்பு

56பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 32 ஆண்டுகள் ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய முத்துக்கண்ணு உடல் நலம் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

அம்மா அவர்களின் நினைவாக அவர்களது குடும்பத்தார் மேட்டுமருதூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிய சமையல் கூடம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


அதனை தொடர்ந்து சமையல் கூடம் அமைத்து கொடுத்த மறைந்த தலைமை ஆசிரியரின் குடும்பத்தார்களுக்கு கிராம பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்தும், முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.


சமையல் கூடம் அமைத்து கொடுத்த நல்ல உள்ளம் படைத்த குடும்பத்தார்களை வழிநெடுகிலும் பெண்கள் ஆராத்தி எடுத்து உறசாக வரவேற்பு அளித்தனர்.


தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், மறைந்த தலைமையாசிரியர் முத்துக்கண்ணு அம்மா அவர்களின் நற்பண்புகள், செயல்பாடுகள், அவர்களால் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மீடியா பத்திரிக்கை உள்ளிட்ட பல துறையில் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி