குளித்தலை சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

82பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கருத்தரங்கம் கூட்டம் பெரியபாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசும் பொழுது கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிக வாக்குகளை பெற்றெடுத்தன. மேலும் அவர்கள் கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் பாஜக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மக்கள் செல்வாக்கில் பல லட்சம் வாக்கு பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் பாஜக அதிக வாக்குகள் பெற வேண்டும். சேலத்தில் 19ஆம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம் என்ற மாநில மாநாட்டிற்கு அனைத்து தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் கருத்தரங்க பொறுப்பாளர் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா, மாவட்ட செயலாளர் ராகினி, மண்டல் நிர்வாகிகள் குளித்தலை ஒன்றிய தலைவர் பொன். ரஞ்சித்குமார், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் ராஜவேல், தோகைமலை ஒன்றிய தலைவர்கள் செந்தில்குமார், ராஜ்குமார் மற்றும் ராஜாபிரதீப், ராமநாதன்பிள்ளை, சாமிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி