குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு சமத்துவ நாள் உறுதிமொழி

64பார்த்தது
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாள் என நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளனர். இந்த சமத்துவ நாளை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலக வளாகம் முன்பு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். டாக்டர் அம்பேத்கரின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்து சமத்துவ நாள் உறுதிமொழியை நகராட்சி ஆணையர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நகராட்சியில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி