தோகைமலையில் திமுக இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய அரசனை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, திமுக மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், பொய்யாமணி தியாகராஜன், புழுதேரி அண்ணாதுரை, ராமர், ஒன்றிய பொறுப்பாளர்கள் கதிரவன், கரிகாலன், நங்கவரம் பேரூர் கழகச் செயலாளர் முத்து மற்றும் கிளை கழக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.