கரூர் மாவட்டம் குளித்தலை கிராமியம் கூட்டரங்கில் குளித்தலை மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் சிறந்த பள்ளி மாணவ, மாணவியர்களைப் பாராட்டுதல் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பாராட்டு விழா மக்கள் நல்வாழ்வு சங்கம் தலைவர் கிராமியம் நாராயணன் தலைமையில் இன்று நடைபெற்றது. சங்க செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கெளரவித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் திருச்சி இதய நோய் சிறப்பு மருத்துவர் செந்தில்குமார், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, முனைவர் ஜெயராமன், கோபாலதேசிகன், சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் சிறந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுதல் தெரிவித்து கௌரவித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், குளித்தலை மக்கள் நல்வாழ்வு சங்கம் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.