கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரிய பாலம் மற்றும் கணேசபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராஜேந்திரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (56), பரமேஸ்வரி (65) மற்றும் கணேசபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் (55) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று (ஏப்ரல் 12) கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அவர்களிடம் இருந்த மொத்தம் 76 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்