கோட்டாறு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தளங்களாக கன மழை பெய்து வந்த நிலையில், மழை நீர் ஓடைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க, மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் கழிவு நீர் ஓடையில் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.