கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை 'தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் 310 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பளம் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் தங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டு மனு அளித்தனர்.