கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46 ஆவது வார்டிற்கு உட்பட்ட என். ஜி. ஓ. பி காலனியில் மழையின் காரணமாக மரம் முறிந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால், மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து, வந்த தீயணைப்பு படையினரும் மின்வாரிய பணியாளர்களும் மரத்தை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வார்டு கவுன்சிலர் பெருமாள் செய்தார்.