குமரியில் வருவாய் அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்ட ஆட்சியரின் தொழிலாளர் விரோத கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் இன்று (அக் 29) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை உட்பட ஆறு தாலுகா அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.