போக்குவரத்து விதிகள் மீறல்: குமரியில் 627 பேர் மீது வழக்கு.

50பார்த்தது
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோ வில் மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி மாநகருக்குள் வந்த 2 கனரக வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மாநகரில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 173 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. இதே போல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நேற்று
வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன எண் இல்லாது இருத்தல், வாகன சாகசம், சிறார்கள் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 627 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி