கன்னியாகுமரி மாவட்டத்தில் பாறை கற்கள், சல்லி, மணல் போன்ற கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவோர் அரசு வழங்கும் ரசீதுபோல போலி ரசீது தயாரித்து சோதனை சாவடிகளை கடந்து செல்வது தெரிய வந்துள்ளது. அரசு உடனடியாக போலி ரசீது தயாரித்து கனிமவளங்கள் கடத்தி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நாம் தமிழர் கட்சி மனு கொடுத்துள்ளது.