கன்னியாகுமரி பஸ் நிலையம் முன்புறமுள்ள சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. அந்த சாலையை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 26– ந்தேதி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரூரில் கடந்த 2011-ம் ஆண்டு வன அலுவலர் ஆறுமுகம், அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள். எனவே, இந்த வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டார் முதல் சுசீந்திரம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதிக்கு செல்லும் பிரதான சாலை மின்விளக்கு இன்றிஇருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு அளித்தனர்.