குமரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்.

69பார்த்தது
மதுரை ஐகோர்ட்டு வக்கீல்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வக்கீல் சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இந்த புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதே போல் பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி