ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்களின் மீதும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் செலவினங்களை மீள கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சந்தா தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி. எஸ். டி. யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று(செப்.3) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் பிள்ளை தலைமை தாங்கினார். மாநில தலைவர் முரளிதரன் துணை பொது செயலாளர் மனோகர ஜஸ்டஸ், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், பொருளாளர் பத்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.