குமரியில் 6 மையங்களில் தட்டச்சு தேர்வு எழுதிய மாணவர்கள்.

64பார்த்தது
குமரி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதன்படி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி, சுங்கான்கடை மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 450 பேர் எழுதுகின்றனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் 3 ஆயிரத்து 121பேர் தேர்வு எழுதினர். தேர்வானது ஜூனியர் 5 பிரிவுகளாகவும், சீனியர் 4 பிரிவுகள் மற்றும் புதுமுக தேர்வு 2 பிரிவுகளாகவும் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி