களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை.

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற களியங்காடு சிவன் கோவிலில் வளர்பிறை பிரதோஷம் நேற்று ( செப்டம்பர் 15) நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கும் பால், தயிர், களபம், சந்தனம், பன்னீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி