கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று வட மாநிலத்தவரால் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மகாவீர் சுவாமி படத்தை தலையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளங்கள் முழங்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஊர்வலமாக சென்று மகாவீர் சுவாமி ஜனக் கல்யாண நிகழ்ச்சியை கொண்டாடினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.