நாகர்கோவிலில் புகையிலை விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் நேற்று டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீ கடையில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளரான பார்வதிபுரத்தில் வசித்து வரும் சாஜகான் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 31 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மேலபெருவிளையை சேர்ந்த ராஜன் (51) என்பவரது கடையில் இருந்து 45 பாக்கெட் புகையிலை பொருட்களை ஆசாரிபள்ளம் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரும் கைது செய்யப்பட்டார்.