கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் இருந்து புது கிராமம் செல்லும் சாலையில் தத்டையார் குளம் ரயில்வே கேட் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் இந்த கேட் மூடப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே இது உள்ளதால் ரயில்கள் இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.