கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இறச்சகுளம் ஊராட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் மீனா கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.