கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - ஒழுகினசேரியிலிருந்து புது கிராமம் சாலையில் உள்ள தத்தையார் குளத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நேற்று (செப்.,2) தொடங்கி இன்று (செப்.,3) நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன.