பெண்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி நாகர்கோவில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் நல்லிணக்க பேரணி நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட
மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசீனா முன்னிலை வகித்தார். பேரணியில் விஜய்வசந்த் எம். பி., ராபர்ட் புரூஸ் எம். பி. , பிரின்ஸ் எம். எல். ஏ. , மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியானது டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு தொடங்கி பார்வதிபுரம் ராஜீவ்காந்தி சிலை முன் நிறைவடைந்தது.