மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று (செப். 15) கேரளா பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு ஒணம் பண்டிகையை கொண்டாடினர். கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு பிரார்த்தனையும் நடைப்பெற்றது. பின்னர் சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.