கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நேற்று (செப்.18) போக்குவரத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர். மதுபோதையில் கார் ஓட்டிய நபருக்கு ரூ. 15000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 1217 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.