கருங்கல்: வடிகாலுக்குள் குழாய் மூலம் கழிவு நீர் வெளியேற்றம்

52பார்த்தது
கருங்கல் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்  தற்போது ரூ. 21 லட்சம் ஒதுக்கீட்டில் புதிதாக மழை நீர் வடிகால் ஓடை அமைத்து, சிலாப் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு பகுதியில் இருந்து  கருங்கல் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் பணிகள் நடக்கிறது.  
     இந்த நிலையில் அப்பகுதியில் கோழிக்கடை நடத்தும் தனிநபர் ஒருவர் மழை நீர் ஒடை  வழியாக குழாய் அமைத்து கழிவு நீரை கொண்டு செல்வது தெரிய வந்தது.   இதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
        இது காண்ட்ராக்டரின் துணையுடன் தான் நடந்திருக்க வேண்டும் எனவும்,   சம்மந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை நீர் ஒடையில் குழாய் பொருத்தப்பட்டது வழியே தெரியாதவாறு ஒரே நாளில் காங்கிரீட் போட்டு மழை நீர் வடிகாலின் மேல் சிலாப் போடும் பணியும் நடைபெற்றுள்ளது.  
மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய் அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி