கொல்லங்கோடு: மீன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
கொல்லங்கோடு: மீன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மேற்கு மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், கனிம வளங்களை எடுத்து கடலை விஷமாக்கும் நாசகார திட்டங்களால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவு திட்டங்களை கண்டித்து குமரி மாவட்டத்தில் கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மீன்பிடி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மீன்பிடி சங்க மாவட்ட பொருளாளர் பிராங்கிளின் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுசெயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் விஜயமோகனன், சங்க மாவட்ட துணை தலைவர் டிக்கார்தூஸ், மாவட்ட செயலாளர் சகாயபாபு, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், மேரிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி