மண்டைக்காடு: பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கேரளா பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இக்கோவில் மாசி கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் இன்று 2-ம் தேதி காலை 4: 30 மணிக்கு திரு நடை திறக்கப்பட்டது. ஐந்து மணிக்கு கணபதி ஹோமம், 6: 30க்கு உஷ பூஜை நடந்தது. காலை 7: 21 மணிக்கு மேல் 8: 30 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்பட்டது. கோவில் தந்திரி சங்கரநாராயண ஐயர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், துணை ஆணையர் பழனிகுமார், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தினமும் 10 நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து தினமும் 10 நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.