தக்கலை:   பைக் - கார் மோதல் 2 பேர் காயம்

55பார்த்தது
களியக்காவிளை  பகுதியை சேர்ந்தவர் எபனேசர். இவர் நேற்று பிற்பகல் தனது சொகுசு காரில் கலியக்காவிளையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே கல்லுவிளை  என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக சென்ற சுவாமியார்மடம் பகுதியை சேர்ந்த ஜெபி என்ற கல்லூரி மாணவர்  சென்ற பைக் மீது மோதியது.

      இதில் பைக்குடன் கல்லூரி மாணவரை பல அடிதூரம் கார் இழுத்துச் சென்றது. கார் சாலையோர கடையின் காம்பவுண்ட் சுவர் மற்றும் கேட் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் ஜெபி காரை ஓட்டி வந்த எபநேசர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

      அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி பதிவு காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி