இரணியல்: கோவில் உண்டியல் உடைப்பு; சிசிடிவி காட்சிகள் வைரல்

69பார்த்தது
இரணியல் அருகே தலகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை சாத்தி விட்டு பூசாரி சென்று விட்டார். அடுத்த நாள்  காலை கோவில் கதவை திறக்க வந்த போது பூட்டு உடைந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
      உள்ளே சென்று பார்த்தபோது கோயில் இருந்த காணிக்கை பெட்டி உடைந்த நிலையில் காணப்பட்டது.   இதை அடுத்து கோவிலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் சுமார் 2. 20 மணி அளவில் லுங்கி சட்டை அணிந்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

     பின்னர் சிறிது நேரத்தில் கையில் கட்டை பையுடன் வெளியேறு செல்வதும் தெரிய வந்தது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள பல்வேறு சிசிடி கேமராவில் பதிவாகி இருந்தது.  

     இது குறித்து கோவில் நிர்வாகத் தலைவர் ஐயப்பன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்  சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி