மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நேற்று தொடங்கி நடை பெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் குளச்சல் நகராட்சி மற்றும் குருந்தன் கோடு வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் என் ரவி மற்றும் தக்கலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.
சுமார் 30 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. உணவு பண்டங்களை மூடி வைக்கவும், தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்கவும், செயற்கை நிறமிகள் பயன்படுத்தாமல் இருக்கவும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும், பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சுத்தம், சுகாதாரம் பேணவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் போது சுமார் 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 30 லிட்டர் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இரண்டு தற்காலிக கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூபாய் 5, 000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தவறு செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டன எச்சரிக்கப்பட்டனர்.