களியல்: குமரியில் கேரளா தெரு நாய்கள்; ரூ. 2 லட்சம் அபராதம்

84பார்த்தது
திருவனந்தபுரம் பகுதியில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட நாய்களை ஏற்றிய வாகனம் ஒன்று இன்று மதியம் குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் வந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத கட்டச்சல் என்ற பகுதியில் நாய்களை அந்த கும்பல் அவிழ்த்து விட்டுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை மடக்கி பிடித்து அவர்களை சிறை பிடித்தனர். மேலும் அவர்களால் அங்கு விடப்பட்ட தெரு நாய்களை அவர்களை வைத்து மீண்டும் பிடிக்க வைத்தனர்.
       இது குறித்து களியல் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட எல்லை பகுதியான நெட்டா சோதனைச் சாவடி வழியாக நாய்களைக் கொண்டு வந்த போது, நாய்களுக்கு ஊசி போடுவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்து கொண்டு வந்துள்ளனர்.
       கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் குமரி எல்லையில் கொட்டப்படுவதை தொடர்ந்து - குமரி எல்லை பகுதியில் நாய்களை கொண்டு விட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நாய்களைக் கொண்டு விட முயன்ற வாகனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் கடையால் பேரூராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிடிப்பட்ட நபர்களிடம்  நபர்களிடம் நாய்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து களியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி