பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. நேற்று பத்தாம் நாள் திருவிழா நள்ளிரவு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
சரியாக இரவு 12 மணிக்கு ஆலயம் அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு கோவில் இருந்து 16 வகையான உணவு பதார்த்தங்கள் செய்து அந்த உணவு பதார்த்தங்களை பானை , பனை ஓலையால் செய்த பெட்டி முதலியவற்றில் தலையில் அர்ச்சகர்கள் சுமந்த வண்ணம் வந்தனர்.
உணவு பொருட்கள் மேலே நீளமான துணியால் மூடிய வண்ணமும், அர்ச்சகர்கள் வாயை மூடிய வண்ணமும், துப்புரவு தொழிலாளர்கள் ஊர்வலத்தின் முன் பகுதியில் சுத்தம் செய்தவாறு சென்றனர். நிசப்த்தமாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட படையல்கள் ஆலயத்தை உள்ளே கொண்டு செயல்பட்டு நடை அடைக்கப்பட்டு அலங்கார ஆதாரதனைகளோடு ஒடுக்கு படையல் முடிந்ததும் குருதி பூஜை நடைபெற்றது.
அதை தொடர்ந்து திரு கொடி இறக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.