கிள்ளியூர் - Killiyur

புதுக்கடை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி என்பவர் மகன் ஆதர்ஷ் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. தந்தை சசி தற்போது வெளியூரில் கொத்தனார் வேலை செய்கிறார். தற்போது ஆதர்ஷின் தாயார் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் ஆதர்ஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இதைப் பார்த்து புதுக்கடை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆதர்ஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏன்? எதற்காகத் தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా