ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் EPS தெரிவித்துள்ளார். "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள்" என்றார்.