கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தினார்.
நேற்று (18-ம் தேதி) இரவு தொலைநாவட்டம் ஜீவன் ஜோதி முதியோர் இல்லத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முதியவர்களை சந்தித்து அவர்களை முறையாக கவனிக்கப்படுகிறார்களா? உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா? வயது அதிகமான முதியவர்கள் உடல் நலம் முறையாக பேணப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.