கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சோமன் - கீதாவின் மகள் ஜோயா (15). பள்ளி மாணவியான இவர் கடந்த பிப். 22-ல் படுக்கையறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட கீதா மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று (பிப். 23) ஜோயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜோயாவின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் இன்னும் தெரியாத நிலையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.