நட்டாலம்:   புனித தேவ சகாயம் திருத்தல பெருவிழா

79பார்த்தது
நட்டாலம் புனித தேவ சகாயம் முதன்மை திருத்தல பெருவிழா நேற்று இரவு  கொடியேற்றத்துடன் தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் முள்ளங்கினாவிளை புனித அந்தோனியார் குருசடி சந்திப்பில் இருந்து  திருக்கொடி பவனி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

.    . விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, புனிதரின் புகழ் மாலை, சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டத்திருப்பலி,   11: 30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை  ஆறு மணிக்கு திருக்கொடி இறக்கப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி