கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் சுனில் (45). 90 சதவீத மாற்றுத்திறனாளி. இவர் தனது வயதான தாயுடன் வசித்து வருகிறார். வெளியில் செல்ல வேண்டுமென்றால் யாராவது சுமந்து கொண்டு தான் செல்ல வேண்டும். இவர் எலக்ட்ரிக் வீல் சேயர் வேண்டி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலுள்ள மாற்றுத்திறனாளர் அலுவலகத்தில் மனு செய்தார்.
அலுவலகத்தில் இருந்த அரசு ஊழியர்கள் அழைத்ததன் பேரில் விசாரணைக்கு இரண்டு தடவை சென்று வந்துள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த பதிலும் வரவில்லை. இரு முறை விசாரணை செல்லும் போது ஆட்டோ கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் ஆகி உள்ளது. அந்த பணம் செலவழிந்து தான் மிச்சம். எந்த வித பலனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சுனில் கூறும் போது, - வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் அடுத்தவர் உதவி இல்லாமல் செல்ல முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து எலெக்ட்ரிக் வீல் சேயர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.